national
மழை விழுகுதுன்னு ஒதுங்குனது ஒரு குத்தமா…? சூறைக்காற்றில் பொளந்து விழுந்த விளம்பர பலகை… வைரல் வீடியோ…!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள முக்கிய சாலையில் வைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய விளம்பர பலகை விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் காலை முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. இந்திய வானிலை ஆய்வு மையமானது பல மாநிலங்களுக்கு சிவப்பு மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்திருக்கின்றது. காலை முதலே தானே மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி வருகின்றது.
அது மட்டும் இல்லாமல் பலத்த காற்று வீசுகின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. கல்யாண் நகரில் உள்ள சஹாஜானந்த் சவுக் என்ற பகுதியில் உள்ள கடை ஒன்றில் இந்த விளம்பர பலகையானது பலத்த காற்று மற்றும் மழை காரணமாக பெயர்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அங்கிருந்த வாகனங்கள் பலவும் சேதம் அடைந்தன. மேலும் பலகைக்கு கீழ் யாரேனும் சிக்கி இருந்தார்களா? என்பது தெரியவில்லை. இந்த விபத்து நடந்த பகுதிக்கு உடனே மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். விளம்பரப் பலகை பெயர்ந்து விழும் பரபரப்பு வீடியோவானது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. சமீபத்தில் தான் மும்பையில் ராட்சத விளம்பர பலகை விழுந்து பலர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.