அமெரிக்காவில் இருந்து இந்தியாவில் குடியேற… 3 காரணங்களை கூறிய பெண்… என்னன்னு தெரியுமா..?

அமெரிக்காவில் இருந்து இந்தியாவில் குடியேற… 3 காரணங்களை கூறிய பெண்… என்னன்னு தெரியுமா..?

அமெரிக்காவை சேர்ந்த பெண் இந்தியாவில் குடியேறுவதற்கு மூன்று காரணங்களை கூறியிருக்கின்றார்.

பொதுவாக வசதியான வாழ்க்கை, படிப்பு, வேலை உள்ளிட்ட காரணத்தினால் அமெரிக்காவில் குடியேறுவது என்பது பலரின் கனவாக உள்ளது. அமெரிக்காவில் ஒரு வேலை கிடைத்துவிட்டால் போதும் செட்டில் ஆகி விடலாம் என்று பலரும் எண்ணி வருகிறார்கள். ஆனால் அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டன் பிஷ்ஷர் என்ற பெண் அங்கிருந்து வெளியேறி கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் டெல்லியில் வசித்து வருகின்றார்.

தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் இவர் டெல்லியில் குடியேறியதற்கான மூன்று காரணங்களை கூறியிருக்கின்றார். கடந்த 2017 ஆம் ஆண்டு தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இந்தியாவிற்கு வந்த போது இங்குள்ள இடங்கள் மிகவும் பிடித்துப் போனது. இதன் காரணமாக டெல்லியில் குடியேற முடிவு செய்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இங்கு குடியேறியதாக ஒரு வீடியோவில் தெரிவித்திருந்தார்.

மேலும் அமெரிக்காவில் எல்லாமே சுயமானதாக இருக்கும். சமூக ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கை முறை பின்பற்றப்படுகின்றது. சமூகம், கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை ஆகியவற்றில் அங்கு வறட்சி உள்ளது. யாரும் பிறருக்கு உதவ முன் வர மாட்டார்கள். இந்தியாவில் வாழ்க்கை முறை வண்ணமயமாக உள்ளது. இங்கு தனிமையை உணர மாட்டோம். மக்கள் உதவி செய்கிறார்கள்.

இரண்டாவதாக என் குழந்தையின் எதிர்காலம் வெற்றிகரமாக இருக்கும் என்று உணர்கிறேன். அமெரிக்காவில் பெற முடியாத சமூக வாழ்க்கை முறை, கலாச்சாரம் அனுபவங்கள் இங்கு என் குழந்தைகளுக்கு கிடைக்கும். பணத்தைவிட சிறந்த வாழ்க்கை மிக முக்கியம். நான் அமெரிக்கா நேசிக்கிறேன். ஆனால் அது எந்த வகையிலும் சரியான இடம் அல்ல என்று அவர் அந்த வீடியோவில் கூறி இருக்கின்றார். இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.