Connect with us

தமிழ் சினிமாவிலும் பாலியல் தொல்லை இருக்கு… நடிகை ஊர்வசி பளிச்…!

national

தமிழ் சினிமாவிலும் பாலியல் தொல்லை இருக்கு… நடிகை ஊர்வசி பளிச்…!

தற்போது மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு நடந்த பாலியல் ரீதியிலான கசப்பான அனுபவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இது குறித்து நடிகை ஊர்வசி கேரளாவில் உள்ள தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்திருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது “நான் ஒன்பது வயதிலிருந்து சென்னையில் வளர்ந்தேன். எனது வாழ்க்கை தமிழில் தான் தொடங்கியது.

அதன் பிறகு தான் தெலுங்கு, கன்னடம் கடைசியாக தான் மலையாளத்திற்கு வந்தேன். திரைப்படத்துறைக்குள் வரும்போது எனக்கு முன்னோடியாக இருந்தால் பல நடிகைகள் இதுபோன்ற பாலியல் தொல்லை பற்றி என்னிடம் கூறியிருக்கிறார்கள். எனவே இந்த பிரச்சனை சினிமா உலகத்தில் புதிதாக இப்போது தோன்றியது கிடையாது. தற்போது திரைத்துறையில் உள்ள பெண்களின் பிரச்சினையை பற்றி வெளிப்படையாக பேசுவதற்கு அரசு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது.

கேரளா சினிமாவில் தான் இப்படி அதிகமாக நடக்கின்றது என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் வட இந்தியாவில் படிப்பறிவு இல்லாத பெண்கள் மீது நடத்தும் பாலியல் கொடுமையோடு ஒப்பிடும்போது கேரளா முன்னேறி தான் இருக்கின்றது. இளம் பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் நடக்கின்றன. ஆனால் கேரளாவில் தான் பெண்கள் அதனை துணிச்சலாக எதிர்கொள்கிறார்கள், எதிர்த்து குரல் கொடுக்கிறார்கள்.

இங்கே முற்போக்கான பெண்கள் அதிகம் உள்ளதால் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இனிமேல் யாரும் பாதிப்பு அடையக்கூடாது என்பதற்காக வெளிப்படையாக போராடுகிறார்கள். தமிழ் சினிமாவிலும் இதுபோன்ற பாலியல் சீண்டல்கள் நடக்கின்றன. ஆனால் அதை வெளிப்படையாக பேசுவதற்கு யாரும் முன் வரவில்லை அங்கே எதுவும் நடக்கவில்லை என்று சொல்ல முடியாது.

சினிமாவில் வேலை செய்யும் பெண்கள் நூற்றுக்கணக்கான நபர்களுடன் தான் சேர்ந்து வேலை செய்கிறோம். தனிப்பட்ட சந்திப்பின்போது தான் இப்படி பாலியல் சீண்டல்கள் நடக்கின்றன. அப்படி என்றால் பெண்கள் சந்திப்பை பொது இடத்தில் நடத்த வேண்டும். ஒரு ஹோட்டல், ரெஸ்டாரண்ட், காபி ஷாப் போன்ற இடங்களில் சந்தித்து பேசுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

தனிப்பட்ட முறையில் வீட்டுக்கோ, அலுவலகத்திற்கு வர முடியாது என்று கூற வேண்டும். அதை ஒரு விதிமுறையாக சினிமா சார்ந்த சங்கங்கள் கடைபிடிக்க வேண்டும். ஒரு பெண்ணை பார்க்கும்போது ஒரு ஆணுக்கு விருப்பம் ஏற்படுகின்றது. அவளது விருப்பத்தை கேட்பதில் தவறில்லை.

உடனே அதையே பாலியல் சீண்டல் என்று கூறக்கூடாது. அந்த ஆண் அதை ஒரு தொழிலாக வைத்து பலரை பின்தொடர்வது தவறு. பெண் மீது தாக்குதல் நடத்துவது குற்ற.ம் இதனால் ஒரு தொழிலே முடக்கப்படுகின்றது என்றால் அதுதான் பிரச்சனை. அப்போதுதான் பெண்கள் புகார் அளிக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” என்று அவர் பேசி இருக்கின்றார்.

More in national

To Top