நெஞ்சில் அப்படி ஒரு டாட்டூ… தானா போய் வம்புல மாட்டிக்கிட்ட ஆர்டிஸ்ட்… இதெல்லாம் தேவையா..?

நெஞ்சில் அப்படி ஒரு டாட்டூ… தானா போய் வம்புல மாட்டிக்கிட்ட ஆர்டிஸ்ட்… இதெல்லாம் தேவையா..?

பெங்களூருவில் டேட்டூ ஆர்டிஸ்ட் ஒருவர் நெஞ்சில் போலீஸ் குறித்து தவறாக டாட்டூ குத்தி இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள டேட்டூ கலைஞர் ஒருவர் “F**k the police” என்று ஒரு நபரின் நெஞ்சில் டாட்டூவை குத்தி வம்பை விலை கொடுத்து வாங்கி இருக்கின்றார். பெங்களூருவில் டாட்டூ சூத்ரா என்ற ஸ்டூடியோ இயங்கி வருகின்றது. அதனை ரித்தேஷ் ஆகாரியா என்ற நபர் நடத்தி வருகின்றார்.

அந்த நபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நபரின் நெஞ்சில் “F**k the police” என்று எழுதப்பட்டிருந்த டேட்டூவை பகிர்ந்ததிலிருந்து பிரச்சனைகள் ஆரம்பித்தது. இந்த புகைப்படம் வைரலான நிலையில் போலீசின் கவனத்திற்கும் இது சென்றது. இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள ரித்தேஷ் எனது கடைக்கு வந்த வெளிநாட்டுக்காரர் ஒருவர் அவரது நெஞ்சில் இப்படி எழுத சொல்லியதாக தெரிவித்துள்ளார்.

இருந்தபோதிலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்த காரணத்தினால் அந்த கலைஞர் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் பிரிவு 352 கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.