நிலத்தகராறில் உயிருடன் புதைக்கப்பட்ட வாலிபர்… தெரு நாயால் உயிர் தப்பிய அதிசயம்…!
உத்திர பிரதேச மாநிலம் ஆக்ராவில் 24 வயதான இளைஞர் ஒருவர் நிலத்தகராறு காரணமாக உயிருடன் புதைக்கப்பட்டார். பின்னர் தெரு நாய்கள் அவரைத் தோண்டி எடுத்த வினோத சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த வாலிபர் கிஷோர். இவருக்கு வயது 24.
கடந்த மாதம் 18ஆம் தேதி அன்று ஆர்கோனி என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது அங்கீத், கௌரவ், கரண், ஆகாஷ் என நான்கு பேர் அவரை தாக்கியதாக குற்றம் சாட்டினார். பின்னர் கழுத்தை நெரித்ததில் அவர் இறந்து விட்டதாக கருதி அவர்களது பண்ணையில் கிஷோரை புதைத்திருக்கிறார்கள்.
கிஷோர் புதைக்கப்பட்ட இடத்தை அங்கு சுற்றித்திரிந்த தெருநாய்கள் கூட்டம் போட்டு தோண்ட தொடங்கியது. அப்போது கிஷோரின் சதையை நாய் கடித்ததில் அவருக்கு திடீரென்று சுயநினைவு வந்துவிட்டது. அங்கிருந்து எழுந்த அவர் அப்பகுதியில் இருந்து எப்படியோ தப்பி சென்றார்.
பின்னர் உள்ளூர் வாசிகள் உதவியுடன் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். பிறகு போலீசில் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தியதில் தப்பிச்சென்ற 4 பேரையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. நிலத்தகராறு காரணமாக புதைக்கப்பட்ட வாலிபர் ஒருவர் தெரு நாய்களால் உயிர் பிழைத்த அதிசயம் மிகப் பெரிய ஆச்சிரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.