national
பசுவதை செய்றாங்க, அதான் கேரளாவுக்கு இந்த நிலைமை… இன்னும் நிறைய நடக்கும்.. பாஜக தலைவரின் சர்ச்சை பேச்சு..!
கேரளாவில் இருப்பவர்கள் பசுவதை செய்வதால் தான் இப்படி நிலச்சரிவு எல்லாம் ஏற்படுகின்றது. இன்னும் நிறைய நடக்கும் என்று பாஜக தலைவர் சர்சையாக பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருக்கின்றது. இதனால் தொடர்ந்து கன மழை கொட்டி தீர்த்து வருகின்றது. கடந்த 30ஆம் தேதி வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பலரும் உயிரிழந்தார்கள்.
முண்டகப் பகுதியில் பயங்கர நிலச்சரிவும், காற்றாற்று வெள்ளமும் ஏற்பட்டது. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 380 ஆக மாறி இருக்கின்றது. இன்னும் பலர் சிக்கி இருப்பதால் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது. இந்த இயற்கை பேரிடர் இந்தியா முழுவதும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் எம்எல்ஏவும் பாஜகவின் மூத்த தலைவருமான கியான் தேவ் அகுஜா என்பவர் சச்சையான விஷயத்தை பேசி இருக்கின்றார். வயநாட்டின் நிலச்சரிவு ஏற்பட்டதற்கு காரணம் அங்கு பசுவதை செய்யப்படுவது தான் என்று கூறி இருக்கின்றார். 2018 முதல் நடந்த பேரிடர்களை நீங்கள் ஆராய்ந்து பார்த்தால் பசுவதை செய்யப்பட்ட பகுதிகளில் தான் அதிக பேரழிவு சம்பவம் ஏற்பட்டுள்ளது.
வயநாடு நிலச்சரிவானது பசு வதையோடு நேரடியாக தொடர்பு உடையது. கேரளாவில் பசுவதை அதிகம் நடப்பதால் தான் இப்படிப்பட்ட பேரழிவு ஏற்படுகின்றது. மேலும் கேரளாவில் பசுவதை நிறுத்தவில்லை என்றால் இது போன்று தொடர்ந்து பேரழிவுகள் நடந்து கொண்டே இருக்கும். உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசத்தில் மேகவெடிப்பு நிலச்சரிவுகள் ஏற்பட்டிருந்தாலும் வயநாடுடன் ஒப்பிடும்போது அங்கு பாதிப்புகள் குறைவு என்று அவர் தெரிவித்திருந்தார். இந்த கருத்தானது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது.