national
ஆபீஸில் மது போதை… உடம்பு வலிக்கு ஏத்த மசாஜ்… அரசு பயிற்சி மைய பிரின்சிபலின் ஒய்யாரம்…!
பிஹார் மாநிலம் பெட்டியா என்கின்ற பகுதியில் இயங்கி வரும் அரசு நர்சிங் ஜிஎன்எம் டிப்ளமோ படிப்புகளுக்கான பயிற்சி மையத்தின் பிரின்சிபல் தனது ஆபீஸில் மது அருந்தியும் மசாஜ் செய்தும் ஒய்யாரமாக இருக்கும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வரலாகி வருகின்றது.
ஜெய்ஸ்வால் என்கின்ற பிரின்சிபல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை படம் பிடித்த அங்கு இருக்கும் மாணவர் அம்மாநில முதலமைச்சர் அலுவலகத்திற்கும், சுகாதாரத்துறை அமைச்சர் அலுவலகத்திற்கும் அனுப்பி வைத்திருக்கின்றார். இதற்கு முன்னரும் ஜெய்ஸ்வால் மீது ஏகப்பட்ட புகார்கள் வந்திருந்த போதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அந்த மாணவர் குற்றம் சாட்டியிருந்தார்.
இதையடுத்து இந்த வீடியோ தொடர்பாக பிரின்சிபல் ஜெய்ஸ்வால் கூறியபோது இவை தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் பொருட்டு ஜோடிக்கப்பட்டது என்று தெரிவித்திருக்கின்றார். பிஹாரில் மதுவிலக்கு அமலில் இருக்கும் நிலையில் அரசு பயிற்சி மையத்தின் தலைவரே தனது ஆபீஸ் ரூமில் மது அருந்துவதும், மாடியில் மசாஜ் செய்வதுமாக குதூகலமாக இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.