national
தெரு நாய்கள் செய்த அட்டூழியம்… ஒன்றை வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை… அதிர்ச்சி சம்பவம்…!
தெரு நாய்கள் கடித்து குதறியதில் வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
மகாராஷ்டிரா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஜவகர் நகரில் வீட்டின் ஒன்றரை வயது குழந்தை விளையாட்டு கொண்டிருந்தது. அப்போது அங்கு இருந்த தெரு நாய்கள் குழந்தையின் தலைமுடியை கவ்விய இழுத்துக் கொண்டு போய் கொடூரமாக கடித்து குதறி இருக்கின்றன.
அந்த இடத்தில் சிதறி கிடந்த குழந்தையின் தலைமுடியை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது தொடர்பாக குழந்தையின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தது. நாய் கடித்ததில் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால் குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது/