national
5 பெண்களை ஏமாற்றி கார், பைக் என்று சொகுசு வாழ்க்கை… விசாரணையில் வெளியான திடுக்கிடும் உண்மை…!
போலீஸ் அதிகாரி என ஏமாற்றி ஒரு நபர் ஐந்து பெண்களை திருமணம் செய்து வாழ்ந்து வந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
ஒடிசா மாநிலம், ஜார்ஜ்பூர் மாவட்டத்தை சேர்ந்த சத்pliயஜித் சமால் என்பவருக்கு 34 வயதாகின்றது. இவர் போலீஸ் அதிகாரி என்று கூறிக்கொண்டு ஒரே நேரத்தில் ஐந்து பெண்களை திருமணம் செய்து வாழ்ந்து வந்திருக்கின்றார். அவர்களிடமிருந்து லட்சக்கணக்காக பணங்களை வாங்கி சொகுசான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார். இந்த நபரால் ஏமாற்றப்பட்ட இரண்டு பெண்கள் காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்தனர்.
புகாரின் பெயரில் விசாரணை நடத்திய போலீசார் சமாலை கைது செய்தனர். அவரை பிடிப்பதற்கு ஒரு பெண் போலீஸ் அதிகாரியை பொறி வைத்தனர். அந்த பெண் அதிகாரியை திருமணம் தொடர்பாக சமால் சந்திக்க வந்தபோதுதான் போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்திருக்கிறார்கள். கைது செய்யப்பட்ட சமாலிடம் போலீசார் விசாரணை செய்தபோது பல உண்மைகள் வெளிவந்தது.
அதாவது இளம் விதவைகள் மற்றும் விவாகரத்து பெற்றவர்களை திருமண தளங்கள் மூலம் குறி வைத்து தான் ஒரு போலீஸ் அதிகாரி எனக் கூறி அவர்களை பேசி சந்தித்து வந்திருக்கின்றார். பின்னர் திருமணம் செய்து கொள்வதாக கூறி கார் மற்றும் பணம் போன்றவற்றை கேட்டிருக்கின்றார். சமாலால் பாதிக்கப்பட்ட பெண் முதலில் வங்கியில் தனிநபர் கடன் பெற்று 8.16 லட்சத்திற்கு காரை வாங்கி கொடுத்திருக்கிறார். மேலும் தொழில் தொடங்குவதற்கு 36 லட்சம் ரூபாய் கொடுத்து இருக்கின்றார்.
மற்றொரு பெண் வங்கி மூலமாக 8.6 லட்சத்திற்கு ஒரு மோட்டார் சைக்கிளும் வாங்கி கொடுத்திருக்கின்றார். இந்த பணம் மூலமாக சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வரும் சமால் தொடர்ந்து பணத்தை திரும்ப கேட்டபோது துப்பாக்கியை காட்டி மிரட்டி வந்திருக்கின்றார். மேலும் அவரது செல்ஃபோனை ஆய்வு செய்தபோது 49 பெண்களுடன் மேட்ரிமோனி தளத்தில் சேட்டிங்கில் இருந்தது தெரிய வந்தது.
அந்த நபரிடம் இருந்து கார், மோட்டார் சைக்கிள், 2.10 லட்சம் ரொக்க பணம், கைதுப்பாக்கி திருமணம் செய்து கொண்டதற்கான இரண்டு ஒப்பந்த சான்றிதழ்கள் போன்றவற்றை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். மூன்று வங்கி கணக்குகளையும் முடக்கிய போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.