Connect with us

திருமணத்திற்குப் பிறகும் முன்னாள் காதலின் நினைவு… மனைவிக்காக கணவர் செய்த மிகப்பெரிய விஷயம்…!

national

திருமணத்திற்குப் பிறகும் முன்னாள் காதலின் நினைவு… மனைவிக்காக கணவர் செய்த மிகப்பெரிய விஷயம்…!

முன்னாள் காதலரின் நினைவாக இருந்த மனைவிக்கு அவரின் கணவர் செய்த செயல் மிகப்பெரிய ஆச்சிரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

பீஹார் மாநிலம், லகிசாராய் மாவட்டத்திலுள்ள ராம் பிளாக்கை சேர்ந்த நபர் ராஜேஷ் குமார். இவருக்கும் குஷ்பூ குமாரி என்பவருக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கின்றது. சமீப நாட்களாக குஷ்பூ குமாரி நடத்தையில் சிறு சந்தேகம் ராஜகுமாருக்கு ஏற்பட்டது. அப்போது அவரிடம் கேட்ட நிலையில் சரியாக பதிலளிக்காமல் மழுப்பி வந்தார்.

மேலும் இரவு நேரத்தில் ராஜேஷ் குமாரின் வீட்டிற்கு யாரோ ஒரு நபர் வந்துகொண்டு இருந்தார். இது குறித்து ராஜேஷ் குமாரின் தாய் அவரிடம் கூற சம்பவ தினத்தன்று வீட்டில் உள்ள அறையில் குஷ்பு குமாரி வேறொரு ஆணுடன் பேசிக்கொண்டிருந்தார். இதை பார்த்த அவரது மாமியார் கேட்க அந்த நபர் வீட்டை விட்டு ஓடி விட்டார். இதையடுத்து பிரச்சனை வெடித்தது. இந்த தகவல் ராஜேஷ்குமாருக்கு தெரியவந்தது.

அவர் மனைவி குஷ்பகுமாரிடம் விசாரித்த போது பல உண்மைகளை அவர் தெரிவித்திருந்தார். அதாவது வீட்டுக்கு வந்து சென்ற நபரின் பெயர் சந்தன் குமார். அவர் குஷ்ப குமாரியின் சிறு வயது நண்பர் பின்னர் இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்திருக்கிறார்கள். இருவரும் திருமணம் செய்து முடிவு செய்து இருக்கிறார்கள். அதன் பிறகு கட்டாயப்படுத்தி அவரது குடும்பத்தினர் ராஜேஷ்குமாருக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள்.

பிறகும் குஷ்பு குமாரிக்கு சந்தன்குமாரின் ஞாபகம் அடிக்கடி வந்து கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் திருமணமானதை மறந்த குஷ்பு குமாரி காதலிடம் போனில் பேசி தனது காதலை மீண்டும் வளர்த்து வந்துள்ளார். அவ்வபோது சந்தனகுமார் வீட்டிற்கு வந்து குஷ்பு குமாரியை சந்தித்து உல்லாசமாகவும் இருந்திருக்கிறார்கள்.

இந்த விவகாரம் கணவருக்கு தெரிய வரவே ராஜேஷ் குமார் கோபமடையவில்லை. மாறாக அவர் தனது மனைவி குஷ்பு குமாரியை அவரின் ஆசைப்படி அவரது காதலருடன் சேர்த்து வைக்க முடிவு செய்து திருமணம் செய்து வைத்தார். விருப்பத்திற்கு குறுக்கே நான் நிற்க விரும்பவில்லை. இருவரும் திருமணம் செய்து சந்தோஷமாக இருக்கட்டும் என்று கூறி அந்த பெண்ணை அவரது காதலருடன் அனுப்பி வைத்துவிட்டார். கணவர் ராஜேஷ் குமார் செய்த இந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

More in national

To Top