national
நண்பர்கள் முன்பு நிர்வாணமாக… கணவன் செய்யும் டார்ச்சர்… மனைவி கொடுத்த பரபரப்பு புகார்…!
நண்பர்கள் முன்பு அடிக்கடி ஆடையை அவிழ்த்து நிர்வாணமாக இருக்கும் படி கணவன் வற்புறுத்துவதாக மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மும்பையில் வசிக்கும் 35 வயதான பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் நண்பர்கள் மீது புகார் அளித்துள்ளது மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கின்றது. மும்பையை சேர்ந்த அந்தப் பெண் விஎப்எக்ஸ் கலைஞராக பணியாற்றி வருகின்றார். அந்தப் பெண்ணின் கணவர் சர்வதேச ஏர்லைன் பைலட்டாக பணியாற்றி வருகின்றார்.
இருவரும் மும்பையில் தனியாக வீடு எடுத்து வசித்து வருகிறார்கள். அடிக்கடி தனது கணவர் நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வந்து பார்ட்டி கொடுப்பார் . Truth or Dare என்று விளையாடி தனது மனைவியை அவர்களின் முன்பு ஆடைகளை அவிழ்க்கும் படி நிர்பந்தம் செய்துள்ளார். மனைவி மறுத்ததால் அவரை அடிக்கடி அடித்து துன்புறுத்தி இருக்கின்றார்.
இதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. தங்களின் ஐந்து வருட திருமண வாழ்க்கையில் கணவர் பலமுறை இப்படி தன்னை நண்பர்கள் முன்னிலையிலும் தனியாக இருக்கும் போதும் அடித்து துன்புறுத்தி இருக்கின்றார் என அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் கணவரை அழைத்து விசாரணை செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.