national
1 காபியை விட கம்மியா கிடைக்கும் 1 ஜிபி… புகைப்படத்தை பகிர்ந்த மத்திய அரசு…!
இந்தியாவில் ஒரு ஜிபி டேட்டாவின் விலையை ஸ்ட்ரீட் கடையின் விலைப்பட்டியலோடு ஒப்பீடு செய்து மத்திய தொலைவு தொடர்பு துறை ஒரு புகைப்படத்தை பகிர்ந்து இருக்கின்றது. இந்த புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த விலையை ஒப்பிட்டு தொலைதொடர்பு துறை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றது.
அதில் இந்தியாவில் ஒரு ஜிபி டேட்டா ஒரு கப் காப்பியை விட மலிவானது என்று எழுதப்பட்டிருக்கின்றது. இது தொடர்பாக சமீபத்தில் மக்களவைத்தில் பேசிய தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா நம் நாட்டில் 117 கோடி மொபைல் இணைப்புகளும், 93 கோடி இணைய இணைப்புகளும் உள்ளது.
ஒவ்வொரு நிமிடத்திற்கும் அழைப்பின் விலை 53 பைசா ஆகும். நாட்டில் உள்ள கட்டணங்களும் உலகில் இருக்கும் மிக குறைந்த கட்டணங்களில் ஒன்றாகும். ஒரு ஜிபி டேட்டாவின் விலை 9.12 ரூபாய்க்கு உலகிலேயே மலிவாக இந்தியாவில் தான் வழங்கப்பட்டு வருகின்றது.
Jio, airtel உள்ள தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் தங்கள் செல்போன் ரீசார்ஜ் சேவை கட்டணத்தை அதிரடியாக உயர்த்திய நிலையில் பிஎஸ்என்எல் மற்றும் தங்களது ரீசார்ஜ் கட்டணங்களை குறைத்து இருக்கின்றது குறிப்பிடத்தக்கது.