national
உ.பியை அதிர வைத்த சீரியல் கில்லர்… அடுத்தடுத்து 9 பெண்கள்… அதிரவைக்கும் காரணம்…!
உத்திரபிரதேசம் மாநிலத்தை அதிரவைத்து வந்த சீரியல் கில்லர் பல மாதங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டு இருக்கின்றார்.
உத்தர பிரதேச மாநிலம், பரேலி என்ற மாவட்டத்தில் கடந்த 13 மாதங்களில் 9 பெண்களை ஒரே மாதிரியாக கொலை செய்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. 40 வயது முதல் 65 வயது உட்பட்ட 9 பெண்களும் ஒரே போல் அவர்கள் கட்டி இருந்த சேலையை கொண்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்து பின்னர் அனைவரின் உடல்களும் ஒரே மாதிரியாக கரும்பு தோட்டங்களில் கண்டெடுக்கப்பட்டது.
கடைசியாக கடந்த ஜூலை மாதம் அனிதா என்ற பெண் ஒன்பதாவதாக கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த கொலையாளியை பிடிப்பதற்காக ஆபரேஷன் தலாஷ் என்ற பெயரில் 300 பேர் அடங்கிய 22 குழுக்களை அமைத்து போலீசார் குல்தீப் என்ற கொலையாளியை பிடித்திருக்கிறார்கள். என்ன காரணமும் இல்லாமல் கொலை சம்பவம் அரங்கேறியிருந்தது.
அவை நடந்த விதத்தை வைத்து மட்டுமே இந்த கொலைகள் அனைத்தும் ஒரே மாதிரியாக நடந்துள்ளது என்பதை போலீசார் கண்டறிந்தனர். இதனால் கொலையாளியின் அடுத்த நகர்வு குறித்து அறிவதற்காக போலீஸ் படையினர் மற்றும் அப்பகுதியில் இருப்பவர்கள் விவசாயிகள் போலவும், ஊர்காரர்கள் போலவும் மாறுவேடத்தில் உலவி வந்தனர். உள்ளூர் வாசிகள் சொன்ன அங்கு அடையாளத்தை வைத்து கொலையாளியின் ஓவியத்தை உருவாக்கி தேடுதல் பணியை தீவிர படுத்தினர்.
அப்பகுதியில் உள்ள ஆப்ரேஷன் தலாஷ் தீவிர படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து நவாப்பஞ்சு மாவட்டத்தில் உள்ள கங்காவர் என்ற பகுதியில் வைத்து குல்தீப் என்ற சீரியல் கொலையாளியை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தான் ஆறு பெண்களை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
திருமணமாகி குறுகிய காலத்திலேயே கொள்கை பின் மனைவி அவரின் அவரை விட்டு பிரிந்து சென்று இருக்கின்றார். இதனால் பெண்கள் மீது குல்தீபுக்கு வெறுப்பு உருவாகி இருக்கின்றது. அதுவே ஒரு கொலை செய்ய தூண்டி இருக்கின்றது. தனியாக சிக்கிய அந்தப் பெண்கள் உடலுறவு மறுக்கவே அவர்களை கொலை செய்து வந்திருக்கின்றார். போலீஸ் மேற்கொண்ட விசாரணையில் இந்த சம்பவங்கள் அனைத்தும் தெரிய வந்திருக்கின்றது.