Connect with us

கன்வார் யாத்திரை… மின்சாரம் தாக்கியதில் பலியான 9 பக்தர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!

national

கன்வார் யாத்திரை… மின்சாரம் தாக்கியதில் பலியான 9 பக்தர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!

கன்வர் யாத்திரையில் பங்கேற்ற பக்தர்கள் 9 பேர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. வட மாநிலங்களில் புகழ்பெற்ற யாத்திரைகளில் ஒன்று கன்வார் யாத்திரை. நேற்று கன்வார் பக்தர்கள் பீகார் சோனாபூரில் உள்ள பாபா ஹரிஹரன் கோவிலுக்கு சென்று ஜல அபிஷேகம் செய்வதற்காக கார்களில் சென்று கொண்டிருந்தார்கள்.

வைஷாலி மாவட்டத்தில் அந்த யாத்திரை சென்று கொண்டிருந்தபோது சுல்தான்பூர் என்ற கிராமத்திற்கு வந்திருக்கிறார்கள். அங்கு மின் வயர்கள் அறுந்து கீழே விழுந்துள்ளன. மின்சார வயர்கள் ஒன்று கார் மீது விழுந்ததில் அந்த காரில் இருந்த ஒன்பது பேர் மின்சாரம் தாக்கி பலியாகி இருக்கிறார்கள்.

மூன்று பேர் படுகாயங்களுடன் தூக்கி வீசப்பட்டனர். இது குறித்து வைசாலி மாவட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். யாத்திரைக்கு வந்த 9 பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

More in national

To Top