national
இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பான நாடா..? ஒரு மணி நேரத்திற்கு 4… தினமும் 86 பாலியல் வன்கொடுமை…!
இந்தியாவில் தினமும் 86 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாவதாக அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியிருக்கின்றது.
கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் 31 வயதான பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்த புள்ளிவிவரங்கள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது .
தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளிவிவரத்தின் படி 2017 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் 1.89 லட்சம் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகி இருக்கின்றது. இதில் 1.91 லட்சம் பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 1.79 லட்சம் வழக்குகளில் பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் தெரிந்த நபராகவே இருந்து வருகிறார்கள்.
இந்தியாவில் சராசரியாக தினமும் 86 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றது. 82 வழக்குகளில் பாலியல் வன்கொடுமை செய்தவர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தெரிந்த நபராக உள்ளார். சொல்லப்போனால் இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் நான்கு பாலியல் வன்கொடுமை நடைபெற்று வருகின்றது.
அதிலும் இந்தியாவில் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்ட பெண்களை அதிக அளவில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படுகிறார்கள். 1. 89 லட்சம் வழக்குகளில் 1.19 லட்சம் பெண்கள் 18 முதல் 30 வயது குட்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த அதிர்ச்சி ரிப்போர்ட் இந்தியாவை பாதுகாப்பான நாடா? என்பதை சந்தேகிக்க வைப்பதாக இருக்கின்றது.