---Advertisement---

உணவில் பாய்சன்… 80 மாணவர்களுக்கு நேர்ந்த கதி… விசாரணை வளையத்திற்குள் வந்த நிர்வாகம்…!

Published on: August 6, 2024
---Advertisement---

உத்திரபிரதேசம் மாநிலம் தியோரியாவில் இருக்கும் மெஹ்ரூனா என்ற கிராமத்தில் பண்டித் தீனதயாள் உபாத்தியாத் ஆசிரமம் முறை இடைநிலை கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த கல்லூரியை சேர்ந்த 80 மாணவர்களுக்கு வாந்தி, பேதி, வயிற்றுவலி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மாணவர்கள் உணவு உண்ட பிறகு இந்த பாதிப்பு ஏற்பட்டு இருக்கின்றது.

இதையடுத்து அவர்கள் சாப்பிட்ட உணவில் நச்சுத்தன்மை கலந்து இருக்கலாம் என கூறப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட நீதிபதி திவ்யா மீட்டல் செய்தியாளர்களிடம் தெரிவித்த போது “மகரிஷி தேவரக பாபா மருத்துவக் கல்லூரியில் ஆகாஷ் மற்றும் நித்திஷ் ஆகிய இரண்டு மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பள்ளியிலேயே தலைமை மருத்துவர் அதிகாரி தலைமையில் மருத்துவக் குழுவிடம் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அனைத்து மாணவர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும், முன்னெச்சரிக்கையாக மருத்துவ குழு பள்ளியில் இருப்பதாகவும், இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து மாவட்ட மாஜிஸ்திரேட் மிட்டல் மற்றும் காவல் கண்காணிப்பாளர் சங்கல்பர்மா ஆகியோர் மருத்துவ கல்லூரிக்கு சென்று மாணவர்களை பார்வையிட்டார்.

இது குறித்து உணவு பாதுகாப்பு உதவி ஆணையர் வினய் கூறுகையில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்தின் குழு கல்லூரிகளுக்கு இடையேயான சமையலறை மற்றும் ஸ்டோர் ரூமில் ஆய்வு செய்யப்பட்டது. அங்கு தயார் செய்த ரொட்டி மற்றும் அங்கிருந்த பருப்பு, காய்கறிகள் அனைத்து உணவுப் பொருட்களின் மாதிரிகளை சேகரித்து உணவு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஆய்வு முடிவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்து இருக்கின்றார்.

পড়তে ভুলবেন না