national
பள்ளத்தாக்கில் தலைக்குப்புற கவுிழ்ந்த கார்… ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலி…!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காரில் சென்று கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த எட்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் தக்கம் பகுதியில் வாகனம் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து குழந்தைகள் மற்றும் மூன்று பெரியவர்கள் என்று எட்டு பேர் உயிரிழந்திருக்கிறார்கள். பலியானவர்களில் ஒரு ஆண், இரண்டு பெண் மற்றும் ஐந்து குழந்தைகள் இருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து காவல்துறை கூறியதாவது “ஒரே குடும்பத்தை சேர்ந்த எட்டு பேர் பயணித்த டாடா சுமோ, டக்சன் என்ற பகுதியின் அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையில் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது” என்று அதிகாரிகள் பதிலளித்திருக்கிறார்கள்.