Latest News
திருப்பதியில் லட்டுவின் நெய் தரம் அறிய ரூபாய் 75 லட்சத்துக்கு நவீன ஆய்வகம்… வெளியான தகவல்…!
திருப்பதியில் லட்டுவின் நெய் தரம் பற்றி அறிவதற்கு ரூபாய் 75 லட்சத்துக்கு நவீன ஆய்வகம் ஒன்று அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
திருப்பதியில் லட்டு நெய் தரம் அறிவதற்கு 75 லட்சத்துக்கு புதிய நவீன ஆய்வகம் அமைக்க இருப்பதாக திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் சியாமளா தெரிவித்து இருக்கின்றார், இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது “திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதத்தில் கலப்பட நெய் பயன்படுத்திய உண்மை தெரிய வந்துள்ளது.
திருப்பதி தேவஸ்தானத்தில் பிரசாதம் தயாரிக்க 5 நிறுவனங்களிடமிருந்து டெண்டர் மூலம் நெய் கொள்முதல் செய்யப்படுகின்றது. ஊழியர்கள் நெய்யின் தரம் சரியில்லை நெய் போன்ற தோற்றம் அளிக்கும் அது உண்மையான நெய் இல்லை. அதில் விலங்கு கொழுப்பு மற்றும் பல்வேறு பொருட்கள் கலந்துள்ளன என்று தெரிவித்திருந்தார்கள். இதை தொடர்ந்து கடந்த ஜூலை 6ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி செய்யப்பட்ட நெய்யை குஜராத்தில் உள்ள தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்திற்கு அனுப்பி வைத்தோம்.
அதன் முடிவுகள் வந்துள்ளன. பரிசோதனை முடிவில் தமிழகத்தில் இருந்து சப்பளை செய்யப்பட்ட தனியார் நிறுவனத்தின் நெயில் கலப்படம் இருப்பது தெரியவந்திருக்கின்றது. இதில் பன்றி இறைச்சி கொழுப்பு, மாட்டு இறைச்சி கொழுப்பு, மீன் எண்ணெய், சோயாபீன்ஸ் எண்ணெய், ஆலிவ் ஆயில், சூரியகாந்தி எண்ணெய் போன்ற பல பொருட்கள் கலப்படம் செய்யப்பட்டது தெரியவந்தது.
திருப்பதி தேவஸ்தானத்திற்கு வழங்கப்படும் தரத்தை பரிசோதனை செய்வதற்கு வெளிநாட்டிலிருந்து 75 லட்சம் மதிப்பில் உபகரணங்களை வாங்கி சொந்தமாக ஆய்வகம் அமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கின்றது. நெய்யின் தரத்தை பரிசோதிக்க நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது. இனி திருப்பதி தேவஸ்தானத்தில் தயாரிக்கப்படும் பிரசாதங்கள் அனைத்தும் தரமான நெய் மற்றும் பொருட்களை வைத்து தான் தயாரிக்கப்படும் என்று தெரிவித்திருக்கின்றார்.