national
அடக்கொடுமையே… மாட்டின் வயிற்றில் 70 கிலோ பிளாஸ்டிக்… அகற்றிய மருத்துவர்கள்…!
மாட்டின் வயிற்றில் இருந்து 70 கிலோ பிளாஸ்டிக் பைகளை கால்நடை மருத்துவர்கள் வெளியில் எடுத்திருக்கிறார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டம் எமிக்கானூரில் பசு மாடு ஒன்று வயிறு பெருத்த காரணத்தால் அவதி அடைந்து வந்திருக்கின்றது.
இதனால் அது எழுந்து நடக்கக்கூட முடியாமல் சாலையோரம் படுத்து கிடந்தது. இதை கண்ட வக்கீல் திம்மப்பா என்பவர் கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவர்கள் மாட்டை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மாட்டை பரிசோதனை செய்ததில் அதன் வயிற்றில் ஏராளமான பிளாஸ்டிக் குப்பைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலமாக மாட்டின் வயிற்றிலிருந்து 70 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை வெளியில் எடுத்தார்கள். தற்போது மாடு ஆரோக்கியத்துடன் இருந்து வருகின்றது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.