national
வயநாடு நிலச்சரிவு… உயிர் பிழைத்தவர்களுக்கு ரூ. 6000… இது எதுக்கு தெரியுமா..? வெளியான தகவல்…!
கேரள மாநிலம் வயநாட்டு நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலச்சரிவால் பல மக்கள் மண்ணோடு மண்ணாக போய்விட்டனர். அவர்களில் பலர்களை காப்பாற்றினாலும் 420க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும் 100 பேர் காணாமல் போயிருக்கிறார்கள்.
அவர்களைத் தேடும் பணி 16-வது நாளாக இன்றும் நடைபெற்று வருகின்றது. இன்னும் கண்டுபிடிக்காமல் இருக்கும் 100-க்கும் மேற்பட்டவர்களை தேடும் பணியில் அப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். இந்த விரிவான தேடுதல் கடந்த ஒன்பதாம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்ற வருகின்றது. மேலும் சூரல்மலை பகுதியில் நேற்று பிற்பகலில் கனமழை கொட்டி தீர்த்தது.
இதனால் சாலியாற்றல் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கு காரணமாக ராணுவ வீரர்கள் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தரைப்பாலம் அந்த வெள்ளத்தில் மூழ்கி போனது. இதனால் மீட்பு குழுவினர் செல்ல முடியாத சூழல் உருவாகி இருக்கின்றது. வெள்ளம் தொடர்ந்து பெருக்கெடுத்து ஓடுவதால் வாகனங்கள் செல்ல ராணுவ வீரர்கள் அமைத்திருந்த பாலம் மூடப்பட்டது.
வயநாடு நிலச்சரிவில் காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை மறுகுடியாத்தம் செய்யும் பணிகளை அரசு தொடங்கி இருக்கின்றது. அதற்கான முதற்கட்ட பணி தற்போது நடந்து வருகின்றது. நிலச்சரிவில் சிக்கி பலியான பலர் தங்களது உடல்கள் சிதைந்து நிலையிலும், பலரது உடல்களை துண்டு துண்டாகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதால் பலியான பலரை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனால் அந்த உடல் பாகங்கள் மற்றும் உடல்கள் அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நிலச்சரிவில் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கிய உள்ளவர்களை வாடகை வீடுகளுக்கு மாற்ற அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. அவ்வாறு வாடகை வீட்டிற்கு செல்பவர்களுக்கு மாத வாடகையாக 6 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. உறவினர்களின் வீடுகளுக்கு மாறுபவர்களுக்கும் ரூபாய் 6000 மாத வாடகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ள உத்தரவில் இந்த தகவல் வெளியாகி இருக்கின்றது குறிப்பிடத்தக்கது.