Connect with us

பிரதமர் மோடிக்கு கொடுக்கப்பட்ட… 600க்கும் மேற்பட்ட பரிசு பொருள்கள் ஏலம்… நீங்களும் பங்கேற்கலாம்..!

Latest News

பிரதமர் மோடிக்கு கொடுக்கப்பட்ட… 600க்கும் மேற்பட்ட பரிசு பொருள்கள் ஏலம்… நீங்களும் பங்கேற்கலாம்..!

பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கப்பட்ட 600க்கும் மேற்பட்ட பொருள்கள் ஏலத்தில் விடப்படவுள்ளது.

பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கப்படும் பொருட்களை அவ்வபோது ஏலம் விடுவது வழக்கம்தான். இந்த பொருட்கள் அனைத்தையும் மின்னணு முறையில் அவ்வபோது ஏலம் விட்டு வருகிறார்கள். இதன் மூலம் கிடைக்கும் நிதியின் ஒரு பகுதியை ராணுவ வீரர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நலனுக்காக வழங்கப்படுகின்றது.

நேற்று பிரதமர் மோடியின் 24வது பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவரின் பிறந்த நாளை முன்னிட்டு ஏகப்பட்ட அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை பிரதமர் மோடிக்கு தெரிவித்து வந்தார்கள். இந்நிலையில் இவரின் பிறந்த நாளை முன்னிட்டு 6-வது முறையாக பிரதமர் மோடியின் பரிசுப் பொருட்கள் ஏலம் விடப்படும் நிகழ்வு தொடங்கியது.

இந்த முறை அவருக்கு பரிசாக வழங்கப்பட்ட 600க்கும் மேற்பட்ட கலைப் பொருட்கள் ஏலத்தில் விடப்படவுள்ளன. இந்த ஏலம் அடுத்த மாதம் 2-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்னணு ஏலத்தில் பங்கேற்பதற்கு https://pmmementos.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் ஏலத்தில் பங்கேற்று பொருட்களை ஏலத்தில் எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

More in Latest News

To Top