national
புத்தகப் பையில் துப்பாக்கி கொண்டு வந்த சிறுவன்… ஷாக்கான பள்ளி நிர்வாகம்…!
தலைநகர் டெல்லியில் நஜப்கர் நகர் பகுதியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. நேற்று எப்போதும் போல் அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வர தொடங்கி இருக்கிறார்கள். அப்போது ஒரு மாணவன் மட்டும் தயக்கத்துடன் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தான். இதைக் கண்ட பள்ளி நிர்வாகத்தினர் அந்த மாணவனை அழைத்தார்கள்.
அவன் புத்தகப் பையில் புத்தகங்களுக்கு பதிலாக துப்பாக்கி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள். உடனே இது குறித்து பள்ளி நிர்வாகத்தினர் உள்ளீர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீசார் துப்பாக்கியை வாங்கி பரிசோதித்தனர். விளையாட்டு பொருள் என நினைத்து மாணவன் துப்பாக்கி கொண்டு வந்ததாக தெரிவித்திருந்தார்.
துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார் உடனடியாக அதற்கான உரிமத்தை ரத்து செய்யும் நடவடிக்கையில் இறங்கினார்கள். விசாரணையில் அந்த துப்பாக்கி மாணவனின் தந்தைக்கு சொந்தமானது என்பதும் அவரது பெயரில் உரிமம் வாங்கப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு அந்த மாணவனின் தந்தை காலமானதால் அந்த மாணவன் அது விளையாட்டு துப்பாக்கி என்று எண்ணி அதனை பள்ளிக்கு எடுத்து வந்திருக்கின்றார். இருப்பினும் இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.