Latest News
கேக் சாப்பிட்ட 5 வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்… பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்…!
கேக் சாப்பிட்ட 5 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெங்களூருவில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
ஸ்விக்கியில் டெலிவரி ஊழியராக பணியாற்றி வருபவர் பாலராஜ். இவர் ஸ்விக்கியில் வாடிக்கையாளர் ஒருவருக்கு ஆர்டர் செய்து கேன்சல் செய்த கேக்கு ஒன்றை வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார். அந்த கேக்கை சாப்பிட்ட பாலராஜின் ஐந்து வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
மேலும் அந்த கேக்கை சாப்பிட்ட பாலராஜ் மற்றும் அவரின் மனைவி நாகலட்சுமி ஆகியோரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக பேசிய ஸ்விகியின் செய்தி தொடர்பாளர் ‘பெங்களூருவில் நடந்த இந்த துரதிஷ்டவசமான சம்பவத்தால் நாங்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளோம்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் எங்கள் குழுவினர் செய்து வருகிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நாங்களும் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றோம். உணவு பாதுகாப்பே எங்களுக்கு முதன்மையானது. ஸ்விக்கி ஆப்-பில் உள்ள அனைத்து உணவகங்களும் FASSI கட்டாயம் வைத்திருக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.