national
பள்ளியில் 10 வயது மாணவனை சுட்ட 5 வயது சிறுவன்… பரபரப்பு சம்பவம்…!
5 வயது சிறுவன் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனை சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
பிஹார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் உள்ள செயின்ட் ஜோன்ட் போஜிங் பள்ளியில் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. துப்பாக்கியால் சுட்டதில் 10 வயது மாணவனின் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதையடுத்து மாணவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றார் .
இந்த விவகாரம் தொடர்பாக தனியார் பள்ளி முதல்வரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வைக்கிறார்கள். மேலும் துப்பாக்கியால் சுட்ட மாணவன் மற்றும் அவரது தந்தையை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
சிறுவனின் கையில் எப்படி துப்பாக்கி வந்தது? என விசாரணை மேற்கொண்டு வருவதாக சுபால் மாவட்ட எஸ்பி தகவல் தெரிவித்து இருக்கின்றார். மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் பைகளை சோதனை இடவும் போலீசார் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.