Connect with us

460 பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும்… கேரளாவிற்கு அபாயம்… வெளியான எச்சரிக்கை..!

national

460 பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும்… கேரளாவிற்கு அபாயம்… வெளியான எச்சரிக்கை..!

கேரளாவில் மேலும் 460 பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

கேரள மாநிலம் வயநாடு மட்டும் இல்லாமல் மல்லபுரம், பாலக்காடு, இடுக்கி மற்றும் பத்தினம்திட்டா ஆகிய மாவட்டங்களிலும் கடுமையான நிலச்சரிவு மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனை கேரள மீன் வளம் கடல் அறிவியல் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது. இந்த மாநிலத்தில் 460 பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் மண் சரிவு ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.

கேரளா மீன் வளம் கடல் அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஆய்வின்படி 32 இடங்களில் 30 சதவீதத்திற்கு அதிகமாகவும், 76 இடங்களில் 20 சதவீதத்திற்கு அதிகமாகவும் நிலச்சரிவு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கின்றது. மேலும் வயநாட்டில் வைத்திரி, தொண்டர்நாடு பொழுதானா, திருநெல்லி, வெள்ளமுண்டா, தரியோடு, முப்பைநாடு, பதிஞ்சசரதாரா உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு அபாய பகுதிகளாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் இடுக்கியில் கொக்கையார், மறையூர் உள்ளிட்ட 20 பகுதிகளிலும்,  மல்லபுரத்தில் ஒரு சில பகுதிகளிலும், பாலக்காட்டில் மூன்று இடங்களிலும், பத்தினம்திட்டா மாவட்டத்தில் அருவாப்புலம், சீத்தாத்தோடு, சித்தார் ஆகிய இடங்களிலும் நிலச்சரிவு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More in national

To Top