பைக்கில் வீலிங் செய்த 44 இளைஞர்கள்… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!

பைக்கில் வீலிங் செய்த 44 இளைஞர்கள்… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!

கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இளைஞர்கள் வீலிங் செய்வதாக புகார் எழுந்தது. இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்த 44 இளைஞர்களை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.

பெங்களூரில் உள்ள பரபரப்பான சாலைகளில் 44 இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்த வீடியோவானது இணையத்தில் வைரலானது. இதையடுத்து பெங்களூரு போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து சர்வதேச விமான நிலைய சாலையில் பைக் ஸ்டண்ட் செய்து கொண்டிருந்த 44 இளைஞர்களை கைது செய்தனர்.

இவர்களின் மீது 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. காவல்துறையின் இந்த அதிரடி நடவடிக்கையை நெட்டிசன்கள் பாராட்டி வருகிறார்கள். மேலும் இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.