பிஹார் மாநிலத்தில் புனித நீராடும் பண்டிகையில் நீரில் மூழ்கி 37 குழந்தைகள் உட்பட 43 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
பீகார் மாநிலத்தில் ஜீவித்புத்ரிகா என்கின்ற புனித நீராடும் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். இந்த பண்டிகையில் 37 குழந்தைகள் உட்பட 43 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும் 3 பேரை காணவில்லை என்று கூறப்படுகின்றது. 15 மாவட்டங்களில் உள்ள ஆறு மற்றும் குளங்களில் இந்த பண்டிகை கொண்டாடுவது வழக்கம்.
இந்நிலையில் இந்த துயர சம்பவம் நடந்ததாக அம்மாநில அரசு தெரிவித்து இருக்கின்றது. ஜீவித்புத்ரிகா என்பது பீகாரில் உள்ள மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்று. இதில் பெண்கள் தங்கள் குழந்தைகளின் நல்வாழ்வுக்காக விரதம் அனுசரித்து தங்கள் குழந்தைகளுடன் நதி அல்லது குளத்தில் புனித நீராடுவார்கள்.
மேலும் இந்த சம்பவத்தில் 37 குழந்தைகள் உட்பட 43 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்திருக்கின்றார்.

