Latest News
ஒரே குடும்பத்தில் 4 பேர் மர்ம மரணம்… நடந்தது என்ன…? மராட்டியத்தில் சோகம்..!
மராட்டிய மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் திடீரென்று உயிரிழந்திருப்பது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
மராட்டிய மாநிலம் துலே என்ற மாவட்டத்தில் சமர்த் காலனிக்கு உட்பட்ட பிரமோத் நகர் பகுதியைச் சேர்ந்த நபர் பிரவீன் மன்சிங். வேளாண் உர விற்பனை செய்து வருகின்றார். இவரின் மனைவி கீதா பிரவீன், ஒரு ஆசிரியையாக பணியாற்றி வருகின்றார். இவர்களுக்கு நித்திஷ் பிரவீன் மற்றும் சௌரம் பிரமின் என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக இவர்கள் யாரும் வீட்டில் இருந்து வெளியில் வராமல் இருந்திருக்கிறார்கள். இவர்களின் வீட்டில் வேலை செய்து வந்த பெண் ஒருவர் இரண்டு முறை வந்து வீட்டு கதவை தட்டி விட்டு திரும்பி சென்றிருக்கின்றார். 4 நாட்களாக சத்தம் எதுவும் இல்லாத நிலையில் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் பிரவீனின் சகோதரரிடம் தகவல் கொடுத்து இருக்கின்றார்.
அவர் நேற்று காலை வீட்டிற்கு வந்தபோது பிரவீன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார். அவருடைய மனைவி மகன்கள் விஷம் குடித்து உயிரிழந்திருக்கிறார்கள். உடனடியாக அங்கிருக்கும் காவல் நிலையத்தில் தகவல் கொடுக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரணை செய்து வருகிறார்கள்.
அவர்களுக்கு வசதியில் எந்த குறையும் இல்லை. ஆனால் அவர்கள் ஏன் உயிரிழந்தார்கள் எதற்காக அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். இது கொலையா தற்கொலையா என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவமானது அப்பகுதியில் வசிப்பவர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.