சமூக வலைதளத்தால் ஏற்படும் சீரழிவு… பலாத்காரத்திற்கு உள்ளான மாணவி… கல்லூரி நிகழ்ச்சியில் வெளிவந்த சம்பவம்…!

சமூக வலைதளத்தால் ஏற்படும் சீரழிவு… பலாத்காரத்திற்கு உள்ளான மாணவி… கல்லூரி நிகழ்ச்சியில் வெளிவந்த சம்பவம்…!

சமூக வலைதள பழக்கத்தால் மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களின் பயன்பாடுகள் அதிக அளவில் இருந்தாலும் அதில் குற்றச்சம்பவங்கள் தான் பெருமளவு நடைபெறுகின்றது. தினந்தோறும் வெளியாகும் குற்ற சம்பவங்கள் தொடர்பான செய்திகள் சமூக வலைதளங்களை சார்ந்து தான் இருக்கின்றது. அப்படி ஒரு சம்பவம் தான் புனேவில் அரங்கேறி இருக்கின்றது.

மாணவி ஒருவர் நான்கு பேருடன் சமூக வலைதள பக்கங்களில் பழகி நட்பாகி இருக்கின்றார். 4 பேரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாதவர்கள். இவர்களால் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை ஏற்பட்டுள்ளது. கல்லூரியில் நடைபெற்ற குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான நிகழ்வின் போது தான் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றது.

புனே கல்லூரியில் படிக்கும் 16 வயது மாணவிக்கு சமூக வலைதளம் மூலமாக நான்கு பேர் நட்பாகி இருக்கிறார்கள். இதன் காரணமாக 4 பேரும் வெவ்வேறு இடங்களில் வைத்து மாணவியை தனித்தனியாக பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள். இதனை வீடியோ எடுத்திருக்கிறார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த போலீசார் நான்கு பேரையும் கைது செய்து இருக்கிறார்கள். இதில் இரண்டு பேர் சிறார்கள் என்பதால் அவர்கள் பற்றிய விவரம் வெளியாகவில்லை. மேலும் மற்ற இரண்டு பேர் 20 முதல் 22 வயது இருப்பவர்கள் என கூறப்படுகின்றது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.