Connect with us

70 வயது மூதாட்டியை சீரழித்த 29 வயது இளைஞன்… போலீசார் அதிரடி நடவடிக்கை…!

national

70 வயது மூதாட்டியை சீரழித்த 29 வயது இளைஞன்… போலீசார் அதிரடி நடவடிக்கை…!

கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட போது 70 வயது மூதாட்டியை இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த சம்பவம் தொடர்பாக கனகக்குன்னு பகுதியை சேர்ந்த தனேஷ் என்கின்ற 29 வயதான இளைஞரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.

முதலில் மூதாட்டி இடம் இருந்து சுமார் ஏழு சவரன் தங்க நகையை திருடியதாகவும் நகைகளை விற்க முயன்ற போது பிடிபட்டதாகவும் போலீசார் கூறியிருக்கிறார்கள். கைது செய்யப்பட்ட தனேஷ் மூதாட்டி தனியாக வசித்து வருவதை நோட்டமிட்டு பின்னர் அவரது வீட்டிற்கு சென்று கொள்ளையடித்தது மட்டுமில்லாமல் அவரை பாலியல் பலாத்காரம் செய்திருக்கின்றார் .

அதன் பின்னர் அவரது செல்போனை திருடிவிட்டு கதவை வெளியில் பூட்டி விட்டு சென்றிருக்கின்றார். இதனால் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாமல் அந்த பாட்டி தவித்து வந்திருக்கின்றார். அக்கம்பக்கத்தினர் இன்று காலை மூதாட்டியை கண்டுபிடித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் நடந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்த பிறகு வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், இந்த வழக்கு தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்திருக்கிறார்கள்.

More in national

To Top