Latest News
28 மாணவிகளின் கை, கால்களை கட்டி போட்டு… விடுதி நிர்வாகி செய்த கொடூர சம்பவம்… அதிரடி கைது…!
28 மாணவிகளின் கை, கால்களை கட்டி போட்டு விடுதி நிர்வாகி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
ஆந்திர மாநிலம், ஏலூரில் தனியார் மாணவிகள் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகின்றது. எர்ரகுண்ட பள்ளியை சேர்ந்த சசிகுமார் என்பவர் இந்த விடுதியை நிர்வாகம் செய்து வருகின்றார். இவருடைய இரண்டாவது மனைவி பனி ஸ்ரீ இந்த விடுதியின் வார்டனாகவும், இவரின் மருமகள் பாதுகாவலராகவும் இருந்து வந்திருக்கின்றார்கள். இந்த விடுதியில் மூன்றாம் வகுப்பு முதல் கல்லூரி வரை படிக்கும் 45 மாணவிகள் தங்கி இருக்கிறார்கள்.
சசிகுமார் தனியாக போட்டோ ஸ்டூடியோ ஒன்றை வைத்து இருக்கின்றார். அவ்வபோது விடுதிக்கு வரும் அவர் மாணவிகள் அறைக்கு அருகே நின்றபடி புகைபிடிப்பார். சில சமயம் பாலியல் சில்மிஷத்திலும் ஈடுபட்டு இருக்கின்றார். அச்சத்தில் மாணவிகள் வெளியில் சொல்லாமல் இருந்து வந்திருக்கிறார்கள்.
கடந்த 15ஆம் தேதி அங்குள்ள மூன்று சிறுமிகளை அழகாக போட்டோ எடுக்கிறேன் என்று வற்புறுத்தி காரில் அழைத்து சென்றிருக்கின்றார். ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்று அங்கு சிறுமியின் கை கால்களை கட்டி போட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகின்றது. மறுநாள் காலையில் அந்த சிறுமிகளை விடுதியில் கொண்டு சென்று விட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவிகள் பல நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்கள். புகாரின் பெயரில் ஏலூர் டிஎஸ்பி சரவணகுமார் மற்றும் போலீஸார்கள் தங்கும் விடுதிக்கு சென்று ஆய்வு செய்து இருக்கிறார்கள். அங்கு மாணவிகளை தனித்தனியாக அழைத்து விசாரணை செய்து அவர்களிடம் வாக்குமூலங்களை பதிவு செய்து யார் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி இருக்கிறார்கள்.
விடுதியில் தங்கிய சிறுமிகள் முதல் கல்லூரி மாணவிகள் வரை பலரை காரில் அழைத்துச் சென்று கை, கால்களை கட்டி போட்டு சசிகுமார் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் போக்ஸோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சசிகுமார் மற்றும் அவரின் மனைவி உள்ளிட்ட அனைவரையும் கைது செய்தனர்.
சசிகுமார் மாணவிகள் விடுதியை அனுமதி இல்லாமல் நடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அங்கு நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த நான்கு மாதங்களில் மட்டும் மொத்தம் 28 மாணவிகளை கை, கால்களை கட்டிப்போட்டு பாலியல் பலாத்காரம் செய்திருக்கின்றார். அங்குள்ள கண்காணிப்பு கேமரா இருக்கும் அறையும் பூட்டப்பட்டிருந்தது. அதை திறந்து கேமரா காட்சிகளை ஆய்வு செய்தால் இன்னும் பல சம்பவங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.