நாடு முழுவதும் வேலையின்மை பிரச்சனை தொடர்ந்து தீவிரம் அடைந்து வருகின்றது. குறைந்தபட்ச காலிப்பணியிடங்களுக்கு கூட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போட்டி போடும் அவல நிலை உருவாகி இருக்கின்றது. சமீபத்தில் குஜராத்தின் அங்கலேஸ்வரரில் 10 பணியிடங்களுக்கு ஆயிரம் பேர் விண்ணப்பிக்க முயற்சி செய்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது .
இதைத் தொடர்ந்து மும்பை விமான நிலையத்தில் 600 காலிப்பணியிடங்கள் இருக்கும் நிலையில் 25,000 இளைஞர்கள் அங்கு குவிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கின்றது. விமானத்தில் பொருள்களை ஏற்றுதல், இறக்குதல் மற்றும் பேக்கேஜ் பெல்ட்டுகள், ராம்ப் டிராக்டர்கள் இயக்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை கையாளுவதற்கு ஆட்கள் தேவை என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
விமான நிலையத்தில் பொருள்களை ஏற்றி செல்பவர்களின் சம்பளம் மாதத்திற்கு 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை இருக்கும் எனவும், பெரும்பாலானவர்கள் கூடுதல் நேரம் பணி செய்தால் 30 ஆயிரம் வரை சம்பளம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் ஏர் இந்தியா நிறுவனம் வேலைக்கு ஆட்கள் தேவை என்று அறிவித்திருந்த நிலையில் அலுவலகத்திற்கு முன்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Jobs- 600
Seekers – 25000
And the government is saying we are the fastest growing economy ! #airindia pic.twitter.com/jn0Nkkcbw0— Dr.Sanjay MD (@DrSanjay277) July 17, 2024
கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறினார்கள். மேலும் வந்தவர்களிடமிருந்து ரெஸ்யூமை வாங்கிக் கொண்டு நேர்முகத் தேர்வுக்கு அழைப்பதாக கூறி அனுப்பி வைத்தார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.