Connect with us

ராஜஸ்தானில் கொட்டி தீர்க்கும் கனமழை…. இதுவரை 20 பேர் உயிரிழப்பு…!

national

ராஜஸ்தானில் கொட்டி தீர்க்கும் கனமழை…. இதுவரை 20 பேர் உயிரிழப்பு…!

ராஜஸ்தான் மாநிலத்தில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 20 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. அதிலும் குறிப்பாக ஜெய்ப்பூர், கரவொலி, சவுராய், மாதோபூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஜெய்ப்பூரில் நிலைமை நிரம்பி வழியும் கனோடா அணைநீரில் மூழ்கி இதுவரை ஐந்து இளைஞர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.

அவர்களின் உடல்களை தேடும் பணி நடைபெற்று வருகின்றது. பாரத் பூரில், ஸ்ரீநகர் கிராமம் அருகே உள்ள ஆற்றில் மூழ்கி இதுவரை ஏழு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளுடன் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.

இதுவரை மழை காரணமாக 20 பேர் மகாராஷ்டிரா மாநிலத்தில் உயிரிழந்திருக்கிறார்கள். பேரிடர் மேலாண்மை நிலைமையை மறு ஆய்வு செய்வதற்காக மாநிலத்தின் முதல் மந்திரி பஜன் லால் சர்மா அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினார். மக்கள் அனைவரும் நீர்நிலைகளுக்கு அருகில் செல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பேரிடர் மேலாண்மை துறையினர் வழங்கும் அறிவுரைகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று முதல் மந்திரி பஜன்லால் சர்மா அறிவித்திருக்கின்றார்.

More in national

To Top