Latest News
தெலுங்கானா துணை மந்திரி வீட்டில் கைவரிசை… திருடர்கள் இரண்டு பேர் கைது…!
தெலுங்கானா துணை மந்திரி வீட்டில் கைவரிசை காட்டிய இரண்டு நபர்களை போலீசார் கைது செய்து இருக்கிறார்கள்.
தெலுங்கானா மாநிலம், துணை முதல் மந்திரி மல்லு பாட்டி விக்கிரமார்கா. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிநாட்டுக்கு சென்று இருந்தார். அப்போ பஞ்சாரா ஹில்ஸில் உள்ள அவரது வீட்டில் 22 லட்சம் ரொக்கம், 100 கிராம் தங்க நகைகள் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் உள்ளிட்ட பொருள்களை வைத்திருந்தார். இந்த பொருட்கள் அனைத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள். இந்நிலையில் மேற்குவங்க போலீசார் அங்குள்ள ரயில் நிலையத்தில் கட்டு கட்டாக பணத்துடன் இரண்டு பேரை கைது செய்தார்கள். விசாரணையில் அவர்கள் பீகாரை சேர்ந்த ரோஷன் குமார் மற்றும் உதயகுமார் என்பது தெரியவந்தது.
இவர்கள்தான் சில நாட்களுக்கு முன்பு தெலுங்கானா துணை முதல் மந்திரி விக்கிரமார்கா வீட்டில் திருடி இருக்கிறார்கள். இவர்கள் இடம் மேற்கொண்ட விசாரணையில் அந்த திருட்டு சம்பவத்தை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். மேலும் இரண்டு பேரையும் மேற்குவங்க போலீசார் ஆந்திர போலீசாரிடம் ஒப்படைத்தார்கள். இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.