Connect with us

பார்க்கிங் பிரச்சினை… கிரிக்கெட் பேட், கம்புடன் மோதலில் ஈடுபட்ட பெண்கள்… வைரலாகும் வீடியோ…!

national

பார்க்கிங் பிரச்சினை… கிரிக்கெட் பேட், கம்புடன் மோதலில் ஈடுபட்ட பெண்கள்… வைரலாகும் வீடியோ…!

உத்திரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் பார்க்கிங் தொடர்பாக இரண்டு குடும்பங்களுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. நொய்டா செக்டர் 72 பகுதியில் பக்கத்து வீட்டுக்காரர்களிடையே ஏற்கனவே பார்க்கிங் தொடர்பாக முன்விரோதம் இருந்திருக்கின்றது.

நேற்று முன்தினம் அந்த முன்விரோதம் மோதலாக மாறி இருக்கின்றது. இதனால் கிரிக்கெட் பேட் மற்றும் தடியுடன் ஆண் பெண்கள் என்று இரண்டு தரப்பினரும் சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் ஒரு வாகனம் சேதம் அடைந்தது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரலானது. இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் இருதரப்பினரை சேர்ந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள். மேலும் இந்த வழக்கு தொடர்பாக 6  பேரை போலீசார் கைது செய்து இருக்கிறார்கள்.

More in national

To Top