Latest News
எப்புர்றா… 18 வயதில் ஐபிஎஸ்… 2 லட்சம் பணம் கொடுத்து ஏமாந்த இளைஞர்… பீகாரில் பரபரப்பு…!
பீகார் மாநிலத்தில் 2 லட்சம் பணம் கொடுத்து ஐபிஎஸ் அதிகாரியாக நடித்த 18 வயது இளைஞரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.
பீகார் மாநிலத்தில் மனோஜ் சிங் என்பவர் மிதிலேஷ் மாஜி என்ற 18 வயது இளைஞரிடம் இரண்டு லட்சம் ரூபாயில் லஞ்சமாக பெற்றுக்கொண்டு போலீசில் வேலை வாங்கித் தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறியிருக்கின்றார். இதனை உண்மை என்று நம்பிய அந்த இளைஞர் தனது தாய் மாமாவிடம் இருந்து 2 லட்சம் ரூபாயை கடனாக வாங்கி மனோஜ் சிங்கிடம் கொடுத்திருக்கின்றார்.
பின்னர் மனோஜ் சிங் அவரது உடல் அளவீடுகளை எடுத்து அடுத்த நாள் அவரை வரவழைத்து ஐபிஎஸ் உடை, பேட்ச் மற்றும் துப்பாக்கியை கொடுத்திருக்கிறார்கள். பின்னர் ஐபிஎஸ் அதிகாரியான மகிழ்ச்சியில் ஐபிஎஸ் சீருடை அணிந்து இடுப்பில் துப்பாக்கியுடன் தாயை சந்தித்து ஆசி வாங்கியிருக்கின்றார். பின்னர் மீண்டும் மனோஜ் சிங்கை சந்தித்து மீதமுள்ள பணத்தை கொடுக்க சென்றிருக்கின்றார்.
அப்போது அவரை பார்ப்பதற்கு கூட்டம் கூடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள ஒருவர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து இருக்கிறார்கள். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போலி ஐபிஎஸ் அதிகாரியை கைது செய்திருக்கிறார்கள். கைது செய்யப்படும் போது நான் ஒரு ஐபிஎஸ் என்ற அந்த இளைஞர் போலீசாரிடம் தெரிவித்து இருக்கிறார்கள். பின்னர் அந்த இளைஞரிடமிருந்து சீருடை மற்றும் துப்பாக்கியை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை செய்து வருகிறார்கள்.