national
கடந்த 5 ஆண்டுகளில்… மொத்தம் 18 ஆயிரம் குழந்தைகள் தத்தெடுப்பு… வெளியான ரிப்போர்ட்…!
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய தத்தெடுப்பு வள ஆணையம் பதில் அளித்து இருக்கின்றது. அதன்படி கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து 18 ஆயிரத்து 179 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டிருக்கின்றன. அவர்களில் சிறப்பு குழந்தைகள் எனப்படும் பல்வகை மாற்றுத் திறனாளிகள் வெறும் 1044 பேர் மட்டுமே..
தத்தெடுக்கப்படும் சிறப்பு குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றது. தத்தெடுக்கப்படும் விகிதம் இப்பொழுதும் குறைவாக இருக்கின்றது. கடந்த மாதம் 5-ம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் காப்பகங்களில் 420 சிறப்பு குழந்தைகள் தத்தெடுப்புக்கு காத்திருப்பதாக மத்திய தத்தெடுப்பு வள ஆணையம் தெரிவித்திருக்கின்றது. மேலும் ஆரோக்கியமான குழந்தைகளை தத்தெடுப்பதில் போட்டின் நிலவுகின்றது.
19 மாநிலங்களில் 10 வயது குட்பட்ட குழந்தைகளில் தத்தெடுக்கப்படுவதற்கான யாருமே இல்லை. இரண்டு வயது குட்பட்ட ஆரோக்கியமான குழந்தைகளில் 25 பேர் மட்டுமே தத்தெடுக்கப்பட்டுள்ளதற்கு காத்திருக்கிறார்கள். சிறிய அளவு குறைபாடு இருந்தாலும் சிறப்பு குழந்தைகளை தத்தெடுப்பதற்கு யாரும் முன்வருவது கிடையாது.
அதே சமயத்தில் வெளிநாடுகளில் சிறப்பு குழந்தைகளை தத்தெடுப்பவர்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்படுவதாக மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்தின் தலைவர் தீபக்குமார் சுட்டிக்காட்டி இருந்தார். மேலும் தான் தலைவராக இருந்த போது ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளை அதிகமாக தத்தெடுப்பதாக அவர் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.