national
ஆந்திராவில் குழந்தைகளை கடத்தி விற்பனை… 17 பேர் கைது… 6 குழந்தைகள் மீட்பு…!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ஜெகநாதசாமி கோவில் அருகே ஹர்பர் பூங்காவில் 5 மாத பெண் குழந்தை விற்க இருப்பதாக சிறப்பு அதிரடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் குழந்தையை விற்க முயன்ற இரண்டு பேரை கைது செய்தனர். அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
இதில் விஜயவாடாவை சேர்ந்த பெண் ஒருவர் 15 மாத குழந்தையை விசாகப்பட்டினத்திற்கு கடத்தி வந்து இடைத்தரகார் மூலமாக விற்பனை செய்ய முற்பட்டது தெரிய வந்தது. அவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் அனக்கா பள்ளி, அச்யுதா புரம், பெத்தாநாவா,ஒரிசா ஆகிய இடங்களில் இருந்து 17 பேர் கொண்ட குழந்தை கடத்தல் கும்பலை போலீசார் கைது செய்தார்கள்.
மேலும் அவர்களிடமிருந்து ஆறு குழந்தைகள் மீட்கப்பட்டிருக்கிறார்கள் குழந்தைகளை கடத்தி வரும் கும்பல் டெல்லி மும்பை ஹைதராபாத் விசாகப்பட்டினம் ஆகிய மாநகரங்களை குழந்தை விற்பனை சந்தையாக கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்திருக்கின்றது. கடத்தி வரப்படும் குழந்தைகள் ரூபாய் 5 முதல் 7 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறார்கள். குழந்தை கடத்தலை தடுப்பதற்காக ஆந்திராவில் உள்ள அரசு மருத்துவமனைகள் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கு உத்தரவிடப்பட்டிருக்கின்றது.