national
வேலையை இழக்கும் நிலை… 20 நாளில் மட்டும் 1500 வைரத் தொழிலாளர்கள்… அதிர்ச்சி ரிப்போர்ட்..!
குஜராத்தின் முக்கிய தொழில்களில் ஒன்று வைர உற்பத்தி தொழில். இந்த தொழிலில் ஏற்பட்டுள்ள மந்த நிலை காரணமாக பல தொழிலாளர்களுக்கு வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட விரக்தியில் பல தொழிலாளர்களுக்கு தற்கொலை எண்ணம் உருவாகி இருக்கின்றது.
தொழிலாளர்களை காக்கும் பொருட்டாக குஜராத்தில் உள்ள வைரத் தொழிலாளர் சங்கத்தால் தற்கொலை தடுப்பு ஹெல்ப்லைன் சேவை தொடங்கப்பட்டிருக்கின்றது. இந்த தற்கொலை தடுப்பு ஹெல்ப்லைன் சேவைக்கு வரும் 20 நாட்களில் 1500 தொழிலாளர்கள் தொடர்பு கொண்டு ஆலோசனை பெற்றிருக்கிறார்கள்.
தினமும் 75 தொழிலாளர்கள் தற்கொலை எண்ணம் தொடர்பாக ஹெல்ப்லைனுக்கு கால் செய்திருப்பதாக அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியிருக்கின்றது. மேலும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வைரத் தொழிலாளர் சங்கம் உதவி செய்து வருகின்றது.
100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு 20 கிலோ கோதுமை, 5 கிலோ அரிசி, 5 லிட்டர் எண்ணெய், சக்கரை, பருப்பு உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் வைரத் தொழிலாளர்கள் சங்கம் வழங்கி வருகின்றது. மேலும் வைர வியாபாரி லாட்ஜி பட்டேல் கஷ்டப்படும் 35 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கியிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது