ஏப்ரல் 15க்குப் பிறகு விமான சேவை தொடங்குகிறதா? அமைச்சர் முக்கியத் தகவல்!

ஏப்ரல் 15க்குப் பிறகு விமான சேவை தொடங்குகிறதா? அமைச்சர் முக்கியத் தகவல்!

ஏப்ரல் 14 ஆம் தேதியோடு 21 நாள் ஊரடங்கு முடியவுள்ள நிலையில் அதன் பிறகு விமானப் போக்குவரத்து தொடங்குமா என்பதற்கு அமைச்சர் பதில் சொல்லியுள்ளார்.

இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதன் பின்னரும் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்றே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ரயில்கள் மற்றும் விமானங்களுக்கு முன்பதிவு சில தினங்களுக்கு முன்னர் தொடங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதனால் ஏப்ரல் 15 முதல் விமானப் போக்குவரத்து தொடங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி  ‘ஊரடங்கு முடிந்த பின்னர் விமானப் போக்குவரத்தைத் தொடங்கலாமா என்று அரசு இன்னும் முடிவு எடுக்க வில்லை. அப்போதைய சூழ்நிலையைக் கணக்கில் கொண்டு முடிவுகள் எடுக்கப்படலாம். ஆனால் முழுவதுமாக விமான சேவை தொடங்கப் படாவிட்டாலும் குறைந்த அளவிலாவது தொடங்கப்படும்’ என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆனால் ஏர் இந்தியா நிறுவனம் தங்கள் முன்பதிவை இப்போது ஏப்ரல் 30 ஆம் தேதி வரை தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Will air travel start after April 15