National News
பழிவாங்கும் செயல்களில் தீவிரம் காட்டி வருகிறார் சந்திர பாபு நாயுடு…பகீர் குற்றச்சாட்டு வைத்த மாஜி…
நடந்து முடிந்த ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியமைத்த்து. சந்திர பாபு நாயடு முதல்வராக பொறுப்பேற்றார்.
நடிகரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் துணை முதல்வராக பதவி ஏற்றார்.இந்நிலையில் குண்டூர் மாவட்டத்தில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கட்டி வந்த ஒய்.எஸ்.ஆர், காங்கிரஸ் கட்சி அலுவலகம் இடிக்கப்பட்டது.
இது குறித்து தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி. தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் இது பற்றி பதிவிட்டுள்ள அவர், ஆந்திராவில் சந்திர பாபு நாயுடு அடக்கு முறையை கையில் எடுத்துள்ளார்.
சர்வாதிகாரியை போல செயல் பட்டு கிட்டத்தட்ட கட்டி முடிக்கப்பட்ட நிலையில் இருந்த கட்சியின் அலுவலகத்தை இடித்துள்ளார்.
உயர்நீதி மன்ற பிறப்பித்த உத்தரவுகள் புறக்கணிக்கப்பட்டு விட்டதாகவும். பழிவாங்கும் அரசியலை கையில் எடுத்துள்ளார் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு.
அதோடு மட்டுமல்லாமல் பழிவாங்கும் அரசியலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளார் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பதிவிட்டுள்ளார்.
அதோடு ஆந்திர மாநிலத்தில் சட்டமும், நீதியும் முற்றிலும் மறைந்து விட்டது எனவும், சந்திர பாபு நாயுடுவின் ஐந்து ஆண்டுகால ஆட்சி எப்படி இருக்கப்போகிறது என்ற செய்தியை அலுவலக இடிப்பு சம்பவத்தின் மூலம் தந்துள்ளார் என சொல்லியிருக்கிறார்.
இந்த வன்முறைக்கும், அச்சுறுத்தலுக்கும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அடிபணியாது, பின்வாங்கவும் செய்யாது. மக்களுக்காக தொடர்ந்து போராடும் எனவும் பதிவிட்டுள்ளார். முன்னதாக நடந்து முடிந்த ஆந்திர மா நில பொது தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது.