தமிழில் வந்த வித்தியாச கதைக்களம் கொண்ட திரைப்படம் தான் வேதம் புதிது திரைப்படம் இந்த திரைப்படம் கடந்த 1987 ஆம் ஆண்டு வெளியானது.
பாரதிராஜா இயக்கத்தில் தேவேந்திரன் இசையமைப்பில் இப்படம் வெளியானது
இப்படம் வேதம் புதிது கண்ணன் என்பவர் எழுதிய சாதிகள் இல்லையடி பாப்பா என்ற கதையின் அடிப்படையில் உருவானது. இப்படத்தில் குறிப்பிட்ட பிராமண சமூகத்தை தழுவி பல காட்சிகள் இருந்ததால் இப்படத்திற்கு கடும் எதிர்ப்பு பிராமண சமூகத்தினரால் இருந்தது.
பின்பு அதெல்லாம் சரியாகி இப்படம் வெளிவந்தது. இப்படத்தில் ஒரு சிறுவனுக்கும் சத்யராஜுக்கும் ஏற்படும் ஜாதி புரிதல் பற்றிய பேச்சுக்கள் நன்றாக இருந்தன. இன்றளவும் எல்லோரையும் அந்தக் காட்சி ரசிக்க வைக்கிறது. நான் கரையேறிட்டேன் நீங்க எப்ப கரையேற போறீங்க என்ற அந்த காட்சி மிகப் புகழ் பெற்ற காட்சி.
இப்படத்தை பார்த்துவிட்டு சத்யராஜின் உயிருக்கு உயிரான தலைவராக விளங்கிய எம்ஜிஆர் அவரை கட்டிப்பிடித்து பாராட்டினாராம். சத்யராஜ் பாலு தேவர் என்ற அந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். அமலா,ராஜா,புரோகிதராக வரும் சாருஹாசன் சத்யராஜின் மனைவியா வரும் சரிதா போன்றவர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர்
படத்தில் கண்ணுக்குள் நூறு நிலவா, புத்தம் புது ஓலை வரும், மந்திரம் சொன்னேன் வந்துவிடு போன்ற பாடல்களை அட்டகாசமாக கொடுத்திருந்தார் அறிமுக இசையமைப்பாளர் தேவேந்திரன். இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் கல்லூரி ஒன்றில் இசை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் அவரை அழைத்து வந்து இப்படத்தில் பணியாற்ற வைத்தனர்.

