Latest News
மனித வேட்டையில் தொடர்ந்து ஈடுபடும் ஓநாய்கள்… சுட்டு பிடிக்க நடவடிக்கை… முதல்வர் அதிரடி உத்தரவு…!
உத்தர பிரதேச மாநிலத்தில் மனித வேட்டையில் ஈடுபடும் ஓநாய்களை சுட்டு பிடிப்பதற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்து இருக்கின்றார்.
உத்திரபிரதேச மாநிலம் பக்ராயிச் மாவட்டம் வனப்பகுதியை ஒட்டி அமைந்திருக்கும் கிராமங்களில் ஓநாய்கள் புகுந்து மனிதர்களை வேட்டையாடி வருகின்றது. ஓநாய் தாக்குதலில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 8 குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலியாகி இருக்கிறார்கள்.
36 பேர் படுகாயம் அடைந்து இருக்கிறார்கள். ஓநாய்களை கூண்டோடு பிடிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் தோல்வியில்தான் முடிந்துள்ளது. இந்நிலையில் உத்திரபிரதேசத்தை சேர்ந்த முதல்வர் யோகி ஆதித்யநாத் ஓநாய்களை சுட்டுப் பிடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
துப்பாக்கி சூடுதலில் நிபுணத்துவம் பெற்ற 9 குழுக்கள் வனத்துறை சார்பில் களம் இறக்கப்பட்டு இருக்கிறார்கள். மயக்க மருந்து கொடுத்து ஓநாய்களை சுட்டு பிடிக்க முன்னுரிமை அளிக்கப்படும். அது பயனளிக்காத நிலையில் அவற்றை சுட்டுக் கொள்வதற்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதற்கு பிறகு ஓநாய்கள் மூலமாக யாரும் உயிரிழக்க கூடாது என்பதற்காக இப்படி ஒரு முடிவை முதல்வர் யோகி ஆதித்யநாத் பிறப்பித்திருக்கின்றார்.