இந்தியாவின் பிரதான வழிபாட்டுத்தளங்களில் முதன்மையாக இருந்து வருவது காசி. உத்தரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள காசிக்கு சென்று முன்னோர்களை வழிபடுவது முக்கியாமான ஒன்றாக இருந்து வருகிறது. சடங்குகள் செய்து முடித்த பின்னர் கங்கா நதியில் நீராடுவது அதிக முக்கியத்துவம் பெறும்.
வாரணாசியில் புனித நீராடி விட்டு தங்களது வேண்டுதல்களை வைத்து விட்டு வருவதும் வழக்கத்தில் உள்ளது. இதற்கென நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் காசியை நோக்கி தனசரி பயணிக்க துவங்குவர். அப்படி ஒரு மகத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுவது கங்கையில் நீராடுவது.
உத்தரபிரதேச மாநிலத்தில் வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் கங்கா நதியில் ஓடும் தண்ணீரின் அளவு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. என்பது முதல் எழுபது அடி அகலமாக இருந்து வந்த கங்கா நதி இப்போது தண்ணீர் வற்றி முப்பத்தி ஐந்து முதல் முப்பது அடியாக காணப்படுகிறது.
தண்ணீரின் அளவும், ஓட்டமும் அதிகாமாக இருந்த நேரத்தில் நதியிலிருந்த குப்பைகள் நீருக்குள் மூழ்கிக்கிடந்த பாறைகள் அதிகமாக வெளியில் தெரிவதில்லை.
ஆனால் இப்போதோ நிலைமை தலைகீழாகத்தான் இருந்து வருகிறது. வாட்டி எடுக்கும் வெயிலின் காரணமாக தண்ணீர் வற்றிப்போவதால் நீருக்குள் மூழ்கிய கழிவுகள், உடைந்த படகுகள் வரை வெளியே தெரியத்துவங்கியுள்ளது.
இது பார்ப்போர் மனதை கவலையாக்கும் நிலையை ஏற்படுத்தி விடுகிறது. காசிக்கு சென்று விட்டு தங்களது பிரார்த்தனைகளை முடித்து விட்டு புனித நீராட செல்பவர்களுக்கு இந்த காட்சிகள் கண்களில் கண்ணீரை வரவழைத்துவிடும் படியாகத்தான் இருந்து வருகிறதாம். தண்ணீர் வற்றிப்போன கங்கா நதியை பார்க்கும் பக்தர்கள் பேர் அதிர்ச்சி ஆகி விடுகிறார்கள்.