மலையாள திரையுலகில் இப்போது இருக்கும் மோஸ்ட் வாண்டட் ஹீரோக்களில் டொவினோ தாமஸுக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. ‘மின்னல் முரளி’, ‘ARM’ என வரிசையாக ஹிட் கொடுத்துக்கொண்டிருக்கும் டொவினோ, அடுத்ததாக ‘பள்ளிச்சட்டம்பி’ (Pallichattambi) படத்தின் மூலம் மீண்டும் ஒரு மெகா ஹிட் கொடுக்கத் தயாராகிவிட்டார். ‘ஜன கண மன’ பட புகழ் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம், அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இப்போது அதற்குத் தீனி போடும் விதமாக, படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த வருடம் கோடை விடுமுறை கொண்டாட்டமாக, வரும் ஏப்ரல் 9, 2026 அன்று ‘பள்ளிச்சட்டம்பி’ உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. 1950-60 களில் கேரளாவின் மலைப்பகுதிகளில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்டு ஒரு ரா-வான ஆக்ஷன் பீரியட் டிராமாவாக இந்தப் படம் உருவாகியுள்ளது. “பள்ளிக்கூடம் போகாத சண்டியர்” என்பது போன்ற ஒரு மாஸான அர்த்தத்தைத் தரும் இந்தப் படத்தின் டைட்டிலுக்கேற்ப, டொவினோ இதில் இதுவரை பார்த்திராத ஒரு ரக்கட் லுக்கில் மிரட்டப் போகிறார் என்பது படத்தின் போஸ்டரைப் பார்த்தாலே தெரிகிறது. வெறும் மலையாளம் மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பான்-இந்தியா லெவலில் படம் களம் இறங்குகிறது.
உண்மையைச் சொல்லப்போனால், டிஜோ ஜோஸ் ஆண்டனிக்கு இந்தப் படம் ஒரு முக்கியமான கம்பேக். இவரது கடந்த படம் எதிர்பார்த்த அளவு போகாத நிலையில், டொவினோவுடன் இணைந்து மீண்டும் ஒரு மேஜிக்கை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் டொவினோவுக்கு ஜோடியாக கயாடு லோகர் நடிக்கிறார். மேலும் விஜயராகவன், பாபுராஜ் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இதில் இருக்கிறது. படத்தின் இசை ஜேக்ஸ் பிஜோய் என்பதால் பின்னணி இசை பட்டையைக் கிளப்பும் என்பதில் சந்தேகமே இல்லை. எது எப்படியோ, தரமான ஒரு ஆக்ஷன் படம் பார்க்கக் காத்திருக்கும் ரசிகர்களுக்கு இந்த ஏப்ரல் மாசம் செம ட்ரீட் தான்!











