Latest News
இனி இது இருந்தா தான் திருப்பதி லட்டு… தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு…!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இனி ஆதார் கார்டு இருந்தால் தான் லட்டுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி திருமலை தேவஸ்தான கூடுதல் அதிகாரி வெங்காய சவுத்ரி இது தொடர்பாக தெரிவித்திருந்ததாவது: “திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை பார்க்கும் சில ஊழியர்கள் தங்களுக்குரிய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வெளி மார்க்கெட்டில் திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதங்களை விற்பனை செய்வதை நாங்கள் கண்காணித்தோம்.
இதை தடுக்க தரிசன டோக்கன் இல்லாத பக்தர்கள் இனிமேல் லட்டு கவுண்டர்களில் ஆதார் அட்டையை பதிவு செய்து இரண்டு லட்டுகளை பெறலாம் என்று முடிவு செய்துள்ளோம். மேலும் இடைத்தரகர்கள் தலாரிகளின் தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பக்தர்களுக்கு விற்கப்படும் லட்டு பிரசாதங்களை வெளிப்படை தன்மையுடன் வழங்கவும் டோக்கன் இல்லாத பக்தர்களுக்கு ஆதார் சரிபார்ப்பு அமல்படுத்தவும் திருப்பதி திருமலை தேவஸ்தானம் முடிவெடுத்திருக்கின்றது.
பொது பக்தர்களின் பெரிய நன்மைக்காக தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக லட்டு வளாகத்தில் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த லட்டுக்களை 48 முதல் 62 வரை உள்ள கவுண்டர்களில் பக்தர்கள் பெற்றுக் கொள்ள முடியும். தரிசன டிக்கெட்டுகள் அல்லது டிக்கெட்டுகள் உள்ள பக்தர்கள் ஒரு இலவச லட்டு பெறுவதைத் தவிர முன்பு போல கூடுதல் லட்டுகளையும் வாங்கிக் கொள்ளலாம். இந்த நடவடிக்கை லட்டு வினியோக அமைப்பில் வெளிப்பட தன்மையை அதிகரிக்கும்” என்று தெரிவித்திருக்கின்றார்.