Connect with us

திருப்பதி லட்டு பிரியர்களுக்கு ஒரு இன்பசெய்தி… இனி அன்லிமிடெட் லட்டு… தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு…!

Latest News

திருப்பதி லட்டு பிரியர்களுக்கு ஒரு இன்பசெய்தி… இனி அன்லிமிடெட் லட்டு… தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு…!

சாமி தரிசன டிக்கெட்களுடன் வந்தால் அன்லிமிடெட் லட்டு வழங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

உலக அளவில் மிகப் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று திருப்பதி ஏழுமலையான் கோவில். இங்கு நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். மழை, வெயில் என எதையும் பொருட்படுத்தாமல் திருப்பதியில் ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துகொண்டு இருக்கின்றனர்.

திருப்பதியில் ஏழுமலையானை தொடர்ந்து மிக ஃபேமஸ் ஆனது அங்கு வழங்கப்படும் லட்டு தான். தற்போது லட்டு பிரியர்களுக்கு இன்பமான ஒரு செய்தியை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருக்கின்றது. திருப்பதியில் சாமி தரிசன டிக்கெட் உடன் வரும் பக்தர்களுக்கு தேவைக்கேற்ப எண்ணிக்கையில் லட்டுகள் வழங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரியான ஷியாமளா ராவ் தெரிவித்திருக்கின்றார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது “சாமி தரிசன டிக்கெட் உடன் வரும் பக்தர்களுக்கு அன்லிமிடெட் லட்டு வழங்கப்படும். நாளை முதல் ஒரு லட்டு ரூபாய் 50 என்ற கட்டணத்தில் பக்தர்கள் பெற்றுக் கொள்ளலாம். பக்தர்களுக்கு தேவைப்படும் அளவுக்கு லட்டுகளை வாங்கிக் கொள்ள முடியும். சாமி தரிசனம் செய்யாதவர்களுக்கு ஆதார் கார்டு அடிப்படையில் தலா 2 லட்டுகள் வழங்கப்படும்.

பக்தர்களுக்கு அன்லிமிடெட்-ஆக லட்டு வழங்க வேண்டும் என்ற பாலிசியை தேவஸ்தான நிர்வாகம் இதுவரை கவனிக்காமல் இருந்துவிட்டது” என்று தெரிவித்திருந்தார். முன்னதாக தரிசன டோக்கன்கள் இல்லாத பக்தர்களுக்கு இனிமே லட்டு கவுண்டரில் ஆதார் அட்டையை பதிவு செய்து 2 லட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More in Latest News

To Top