கல்லூரி மாணவிகள் தங்கி இருந்த விடுதி கழிவறையில் ரகசிய கேமரா… 3 பேர் கைது…!

கல்லூரி மாணவிகள் தங்கி இருந்த விடுதி கழிவறையில் ரகசிய கேமரா… 3 பேர் கைது…!

கல்லூரி மாணவிகள் தங்கி இருந்த விடுதிக் கழிவரையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

ஆந்திரா மாநிலம், கிருஷ்ணா மாவட்டம் மச்சிலிப்பட்டினம் குட்ல வல்லேர்வில் இருக்கும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி மாணவிகள் விடுதியில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த ஆந்திர மந்திரி கொள்ளு ரவீந்திரன், கலெக்டர் பாலாஜி மற்றும் போலீஸ் சூப்பிரண்டு கங்காதர ராவ் ஆகியோர் கல்லூரிக்கு சென்று மாணவர்களிடம் சமாதானமாக பேசி போராட்டத்தை கலைக்க கூறினார்கள்.

இது சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். கல்லூரி மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக இதுபோன்ற ரகசிய வீடியோ கேமரா பொருத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. ரகசிய கேமரா பொருத்தியதாக பிரகாச மாவட்டம், புல்லல செரிவு அடுத்த பிடெக் இறுதி ஆண்டு படித்து வந்த மாணவரும் அவருக்கு உதவி செய்த இரண்டு மாணவர்களையும் போலீசார் கைது செய்து இருக்கிறார்கள்.

அவர்களிடம் இருந்த லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டு 300-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சம்பந்தப்பட்ட மாணவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றபோது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் நீங்களா கேமரா பொருத்தினீர்கள்? என கிண்டல் அடித்து கோஷமிட்டனர்.

இதையடுத்து மாணவிகள் கழிவறையில் வேறு கேமரா பொருத்தி இருக்கிறார்களா? என்பதால் கழிவறைக்கு செல்லவே பயமாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். இதையடுத்து போலீசார் மாணவிகளின் பெற்றோர்களுடன் கல்லூரி முழுவதும் நவீன கேமராக்களை கொண்டு பரிசோதனை செய்தனர். அந்த பரிசோதனையில் எந்த கேமராக்களும் பொருத்தப்படவில்லை என்பது தெரிய வந்தது. அதன் பின் மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு விடுதிக்கு சென்றனர்.