Latest News
அவர் எப்படி வாழ்றது…? கணவன் மீது வழக்கு தொடர்ந்த மனைவி… நீதிபதி கேட்ட சரமாரி கேள்வி…!
குறைவாக சம்பளம் வாங்கும் கணவரிடம் ஜீவனாம்சம் கேட்ட மனைவியை நீதிபதி விமர்சித்து இருக்கின்றார்.
இன்றைய சூழலில் விவாகரத்து என்பது அதிகரித்துக் கொண்டு இருக்கின்றது. கணவன் மனைவியினர் ஒத்துவாள விரும்பாமல் தொடர்ந்து கோர்ட் படி ஏறும் நிலை அதிகரித்து வருகின்றது. நீதிமன்றங்களில் தொடர்ந்து விவாகரத்து தொடர்பான வழக்குகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் ஒரு விவாகரத்து தொடர்பான வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அதாவது மாதம் 12 ரூபாய் சம்பளம் வாங்கும் கணவனிடம் குழந்தை பராமரிப்பு செலவுக்காக 10,000 வாங்க வேண்டும் என்று மனைவி கோரிக்கை வைத்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கின்றார். கர்நாடகாவில் விவாகரத்து வழக்கு ஒன்றில் தனது குழந்தையின் பராமரிப்பு செலவுக்கு பணம் கேட்டு தொடர்ந்த வழக்கை தான் நீதிபதிகள் விமர்சித்து இருக்கின்றனர்.
இந்த வழக்கை விசாரணை செய்த போது கணவன் வெறும் 12000 ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்குவதை அறிந்த நீதிபதி உங்களுக்கு 10,000 கொடுத்துவிட நீதிமன்றம் உத்தரவிட்டால் அவரால் எப்படி வாழ முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கணவனின் ஊதியம் அதிகரித்தால் குழந்தை பராமரிப்பு செலவை அதிகரிக்க கோரி மனைவி மற்றொரு வழக்கு தொடலாம் என்று நீதிபதி தெரிவித்திருக்கின்றார். நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கு தொடர்பான வீடியோவானது இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.