Latest News
ஊசி போட்ட நர்ஸிடம்… படுக்கையில் கிடந்த நோயாளி செய்த செயல்… மேற்கு வங்காளத்தில் மற்றொரு சம்பவம்…!
மேற்குவங்க மாநிலத்தில் ஊசி போட வந்த நர்ஸிடம் நோயாளி பாலியல் சீண்டல் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
மேற்குவங்க மாநிலத்தில் பீர்பும் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகின்றது. இதில் நோயாளி ஒருவர் கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஸ்ட்ரக்சரில் வைத்து நேற்று இரவு அழைத்துவரப்பட்டார். அவரின் உடல்நலம் மோசமாக இருந்த நிலையில் குளுக்கோஸ் ஏற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் கூறி இருக்கிறார்கள்.
இதனால் இரவு பணியில் இருந்த நர்ஸ் ஒருவர் ஊசி போட்டு குளுக்கோஸ் ஏற்றும் பணியில் ஈடுபட்டிருக்கின்றார். அதிக காய்ச்சலால் படுத்த படுக்கையாக இருந்த நோயாளி அந்த நர்சிடம் பாலியல் சீண்டல் செய்திருக்கின்றார். தகாத இடங்களில் தொட்டதுடன் அவரை ஆபாச வார்த்தைகளால் பேசியிருக்கின்றார்.
இதையடுத்து மருத்துவமனையின் நிர்வாகிகள் சம்பவம் பற்றி தகவல் அறிந்து உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு வந்து அந்த நோயாளியை கைது செய்தனர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து நர்ஸ் கூறும் போது காய்ச்சலால் பாதித்த ஆண் நோயாளி ஒருவர் கொண்டுவரப்பட்டார்.
டாக்டரின் அறிவுரையால் இரவு பணியில் இருந்த போது அவருக்கு குளுக்கோஸ் செலுத்துவதற்கு சென்றேன். அப்போது நோயாளி என்னை தொட்டு தகாத வார்த்தைகளால் பேசினார். ஒரு நோயாளி எப்படி இந்த வகையில் நடந்து கொள்ளலாம் என்று கேட்டுள்ளார். இந்த புகார் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் பணியை நிறுத்துவது பற்றி பரிசீலனை செய்வோம் என்று தெரிவித்திருக்கின்றார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.